. -->

Now Online

FLASH NEWS


Monday 11 May 2020

வரும் 31ம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளை சென்னையில் அனுமதிக்கக் கூடாது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

*தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை








சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், பின்னர் 19 நாட்கள், அடுத்தது 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார். அந்தவகையில், 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். மேலும் சிவப்பு மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பிரதமருடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது
. * கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு நிதியாக மத்திய அரசு ரூ.2,000 கோடி வழங்க வேண்டும்
* ஜிஎஸ்டி நிலுவைத் தொகையும் மத்திய அரசு வழங்க வேண்டும்
 * மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும்
* நெல் கொள்முதலுக்காக, மானியத்தொகை ரூ.1,321 கோடியை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும். 
* தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 2-வது தவணையை உடனடியாக வழங்க வேண்டும்.
 * வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான செலவையும் ஈடுகட்ட நிதி ஒதுக்க வேண்டும்
 * மின்துறைக்கு ஈடுபட்டுள்ள சுமையை குறைக்க உடனடியாக நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் 
*நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும்
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதியை ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் 
* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்
 * குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும் 
* சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் 
* விமான சேவைகளையும் மே 31-ம் தேதி வரை தொடங்க கூடாது * தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் விகிதம் 3.67 சதவீதமாக உள்ளது 
* மொத்த கொரோனா நோயாளிகளில் 27 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
 * தற்போது 59,610 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.