. -->

Now Online

FLASH NEWS


Wednesday 13 May 2020

20 லட்சம் கோடியில் திட்டங்கள்-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு என்னென்ன? முழு விவரம்





*வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கு, நிறுவனம், ஊழியர்கள் செலுத்த வேண்டிய தலா 12% பிஎஃப் தொகையை அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்துள்ளார். 

பிஎஃப் சந்தா தொகையை அரசு செலுத்துவதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். அடுத்த காலாண்டில் பிஎஃப் சந்தாவை தொழிலாளர்கள், நிறுவனங்கள் 10% செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளார்.


*ரூ.200 கோடி வரையிலான அரசு துறைகளின் கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தபுள்ளி கோர வேண்டியதில்லை







*அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்


வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்

20 லட்சம் கோடியில் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த சிறப்பு திட்டங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் கூறுகையில்,
சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலதுறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகள் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அறிவித்த விரிவான பொதுநோக்கு திட்டத்தின் பெயர் ''தன்னிறைவு இந்தியா''. இதில் 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படும். உள்ளூர் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாக தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு எட்டியிருக்கிறது. இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படும்.
இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே தற்சார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ''தற்சார்பு இந்தியா'' என்றால் உலகத்திடம் இருந்து துண்டித்துக் கொள்வதல்ல, தன்னம்பிக்கையை அதிகரிப்பது ஆகும். பிரதான் மந்திரி கிசான் திட்டம் மூலம் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்தப்பட்டது. பொதுமுடக்க காலத்தில் இது மிகவும் உதவியாக இருந்தது. நேரடி மானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது இதனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று இருக்கிறது. சிறு, குறு தொழில் துறைக்கு இன்று 6 சலுகைகளுடன் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இன்று மொத்தம் 15 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சிறு, குறு தொழில் துறைக்கு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். பொருளாதாரம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் ஆகியவை வளர்ச்சியின் தூண்கள். இவைகளை அடிப்படையாகக்கொண்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நெருக்கடிகளில்தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறோம். நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குவதால் 2 லட்சம் நடுத்தர, சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை விரிவாக்க புதிய கடன் திட்டம் உள்ளது. குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடியாக உயர்தப்படும். நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலீட்டு வரம்பு 10 கோடியிலிருந்து 20 கோடியாக அதிகரிப்பு. சிறு, குறு தொழில் துறைக்கு பிணை இன்றி 3 லட்சம் ரூபாய் கோடி மதிப்பிலான கடன் உதவி திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்படும். 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவித் திட்டத்தில் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். 100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு 25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும். கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டிற்கு கடன் தவணை வசூலிக்கப்பாடது. இந்த புதிய கடன் வசதியை பெற, சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தரத் தேவையில்லை என்றார்.






நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு சுருக்கமாக...

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்

வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் - பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்.

நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்

மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன.

பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது

உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது - நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்.

41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன.

6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது

சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி,

சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன

45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

4 ஆண்டு காலங்களில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும்.

12 மாதங்கள் கழித்துதான் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலமும் தொடங்கும்.

வருமான வரி செலுத்துவோருக்கு ரூ18,000 கோடி நிலுவை தொகை திருப்பி தரப்பட்டுள்ளது.

வருமானவரி செலுத்துவோர் 14 லட்சம் பேர் ரீ பண்ட் நிலுவை தொகைகளை பெற்றுள்ளனர்.

அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம்.

ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.

நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி துணைக்கடன் வழங்கப்படும்

நிதிக்குள், நிதி" திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம்

ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.

ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்

கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை.

RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

ஏற்கனவே கடன் பெற்று செலுத்த முடியாமல் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் இதற்கு தகுதியானவர்கள்.

சிறப்பாக செயல்படும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.50,000 கோடி கடன் வழங்கப்படும்.

ஜூன், ஜூலை, ஆக., பிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தும்.

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அரசு செலுத்தும்.

வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்

ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.

ரூ.200 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அரசுத்துறையில் இனி உலக அளவில் டெண்டர் கோரா தடை விதிக்கப்படும்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

சிறு, குறு நிறுவனங்களின் EPF தொகையை அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசு செலுத்தும்

ஜூன், ஜூலை, ஆக. மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பையும் அரசு வழங்கும்.

ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பை மத்திய அரசு வழங்கியது.

சிறு நிறுவனங்கள் இ-மார்கெட்டிங் மூலமாக பொருட்களை விற்க வசதி ஏற்படுத்தி தரப்படும்

வர்த்தக கண்காட்சிகள், பொருட்காட்சிகள் நடத்தப்பட இயலாத சூழ்நிலையில் ஆன்லைன் சந்தைகள் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு உருவாக்கப்படும்.

மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும்

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ30 ஆயிரம் கோடி நிதி உதவி

ஒப்பந்ததாரர் வங்கி உத்தரவாதம் 6 மாதம் நீட்டிப்பு.

சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம்.

அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம்.

கொரோனா நிகழ்வை கடவுளின் செயலாக கருதி, ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்.

கடந்த மார்ச் 25க்குள் கட்டுமானத்தை முடித்து, நிறைவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கு அவகாசம்

வருமான வரி தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம்.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு

ஊதியம் வழங்கும் போது பிடிக்கப்படுகிற வருமான வரி தொகையில் (TDS) 25% குறைப்பு.

ஊதியம் வழங்கும் போது பிடிக்கும் வருமான வரி தொகையில் 25% குறைப்பு, நாளை முதல் மார்ச் 2021 வரை குறைப்பு