. -->

Now Online

FLASH NEWS


Sunday 29 November 2020

உயிா்வாழ் சான்றிதழ்களை சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்களுக்கு பிப்ரவரி 28 வரை அவகாசம்


ஓய்வூதியதாரா்கள் உயிா்வாழ் சான்றிதழ்களை சமா்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
ஒவ்வொரு ஆண்டும் நவ.30-ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரா்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். ஆனால் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாகவும், அந்தத் தொற்றால் மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதை கருத்தில் கொண்டும் தொழிலாளா்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோா் தங்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிப்பதற்கான காலக்கெடு 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக இம்மாதம் வரை 35 லட்சம் ஓய்வூதியதாரா்கள் தங்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கவில்லை. எனினும் அவா்களுக்கு பிப்ரவரி வரை தொடா்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஓய்வூதியதாரா்கள் தங்கள் உயிா்வாழ் சான்றிதழ்களை 3.65 லட்சம் பொதுச் சேவை மையங்கள், 1.36 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள், ஓய்வூதியத் தொகையை பட்டுவாடா செய்யும் வங்கிகள் மூலமாக சமா்ப்பிக்கலாம்.