. -->

Now Online

FLASH NEWS


Wednesday 2 December 2020

வரலாறு அறிவோம் - டிசம்பர்-2 பாண்டித்துரை தேவர் நினைவு நாள்



சைவ சமய பாடல்களை தொகுத்து சைவ மஞ்சரி என்ற பெயரில் நூல் வெளியீட்டு. சிவஞான புரத்து முருகன் மீது பற்று கொண்டு காவடி சிந்து பாடி, கூடல் நகரான மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரை தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று.


தமிழ் மொழி வளர்ச்சிக்கு தம் வாழ்வை அர்ப்பணித்து அருந்தமிழ் ஆற்றிய பாண்டித்துரை தேவர் அவர்கள் மார்ச் 21, 1877 ஆம் ஆண்டு நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் *உத்தர பாண்டியன்*. புலவர் அழகர் ராஜுவிடம் தமிழ் மொழியையும், வெங்கடேஸ்வர சாஸ்திரியிடம் ஆங்கில மொழியையும் மாசற கற்றார். ராமநாதபுரத்தில் பள்ளிப் படிப்பையும், சதாமனம் முத்துசாமி ஐயங்காரிடமும்,
மதுரை இராமசாமி பிள்ளை இடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். பழனி முத்துக்குமார தம்பிரானிடம் சைவ சித்தாந்தங்களை
கற்றார்.
தமிழ் மொழியின் மீது இவரைப்போலவே தீராத பற்று கொண்டிருந்த இவரது ஒன்றுவிட்ட சகோதரருடன் சேர்ந்து செப்டம்பர் 14,1901இல் நான்காவது தமிழ் சங்கத்தை மதுரையில் நிறுவினார்.
உ.வே.சாமிநாத ஐயர், பரிதிமாற்கலைஞர் , சோழவந்தான் அரசசண்முகனார் போன்ற தமிழறிஞர்களை அழைத்து சிறப்பு செய்தார்.
நான்காம் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக தமிழ் கல்லூரி ஒன்றையும், வெளிவராத ஏடுகளையும், அறிய பல நூல்களையும் தேடிப் பெற்று தொகுத்து வைத்தார். வெளிவராத நூல்களை வெளிக் கொணர்ந்தார் வடமொழி ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். தமிழறிஞர்களை ஒன்று கூட்டி தமிழ் ஆராய்ச்சி நடத்தினார். அவசியமான, புதுமைகளை படைத்து அரங்கேற்றுதல் போன்ற உயர்ந்த நோக்கங்களுடன் இச்சங்கம் செயல்பட்டது.
இச்சங்கத்திற்கு மன்னர்களும், நிலச்சுவான்தார்களும், செல்வந்தர்களும் வாரி வழங்கியதால் இச்சங்கத்தின் நோக்கம் சிறப்புடன் நிறைவேறியது.
ஸ்காட் பாதிரியார் எழுதிய *அகத்தியர் திருத்திய திருக்குறள்* என்ற பெயரில் பிழை உள்ள நூலை எழுதினார். அவரை கண்டு வெகுண்டெழுந்த பாண்டித்துரை தேவர் அந்நூல் முழுவதையும் வாங்கி தீயிட்டு தமிழில் மாசு கலக்க இருந்ததை தடுத்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை தொடங்கியது முதல் இறக்கும் வரையில் பாண்டித்துரை தேவர் அதன் தலைவராக இருந்தார். இவர்தான் நாற்பத்தி நான்காம் வயதில் டிசம்பர் 2ஆம் நாள் 1911ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 1981ஆம் ஆண்டு இவருக்கு மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் சிலை நிறுவப்பட்டது.
தமிழுக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் இயங்கியவர். தமிழ்மொழி தொடர்ந்து இயங்க நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர் பாண்டித்துரை தேவர் அவர்கள். அவரது புகழைப் பாடுவோம், அவரது நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.
அவர் விட்டுச் சென்ற தமிழ் பணியை தொடருவோம்...




முனைவர் ராஜா ஆ
பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம்