. -->

Now Online

FLASH NEWS


Monday 18 January 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கையுடன் ஏற்பாடுகள் தயார் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்


 கொரோனா பாதிப்பு ஊரடங்குக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்துபள்ளிக்கூடங்களில் தூய்மைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.முதல் கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.குறிப்பாக பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு படிவத்துடன் வரும் மாணவ-மாணவிகளை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பில் அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் நேரடியாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக கற்றல் சூழ்நிலைகளுக்கு தயார் படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா (கோவிட்-19 )குறித்து சமுதாயத்தில் நிலவும் உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான கருத்துகள் குறித்த அச்சங்களை நீக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் பேசி உண்மையை உணர்த்த வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பின்றி இருக்க மாணவ-மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக விலகல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த சுவரொட்டிகளை ஆசிரிய- ஆசிரியர்கள் உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.பள்ளிகள்கள் நாளை திறக்கப்படுவடதை முன்னிட்டு வகுப்பறைகள் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மாணவிகள் பயன்படுத்தும் பெஞ்ச், டெஸ்க் ஆகியவை புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கின்றன. கழிவறை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகள் வரும்போது அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்ய கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. காய்ச்சல் இருப்பதாக மாணவிகள் உணர்ந்தால், உடனடியாக பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.பவானியில் காலிங்கராயன் நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் பள்ளிகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அட்டவணை வெளியாவதை பொருத்து, பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்து பேசி பின்னர் முடிவு செய்யப்படும்  என கூறினார்.