. -->

Now Online

FLASH NEWS


Sunday 6 June 2021

பாதங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான டிப்ஸ்




 ஒரு பக்கெட்டில் மிதமான சுடு ஒரு சுடு நீரை எடுத்து அதில் 10 மி.லி. டெட்டாலும் ,20 மி.லி. ஷாம்புவும் கலந்து நன்றாக கலக்குங்கள் . பின்பு அதில் 10 நிமிடம் பாதங்களை அமுக்கி வையுங்கள் . இவ்வாறு செய்வதால் கால் பதங்களில் உள்ள அழுக்குகளும் கிருமிகளும் நீக்கப்படுவதோடு பாதங்களின் அழகு கூடுகிறது.

மசாஜ் கீரீம் அல்லது மாயிஷ்சரைசிங் லோஷன் கொண்டு பாதத்தில்லிருந்து கணுக்கால் வரை மசாஜ் செய்து வருவது பாதங்களுக்கு அழகு சேர்க்கும் .

பஞ்சு ,நெயில் பாலிஷ் ரிமூவர் இரண்டையும் கையில் கொண்டு ரிமுவரில் பஞ்சை முக்கி ,கால் நகங்களில் தடவி நகப்பாலிஷைப் போக்குங்கள் .நகத்தை சீராகா வெட்டுங்கள்.

 நகத்தை தசைப்பாகம் வரை வெட்டக்கூடாது. வெட்டினால், நகத்தின் அழகு மறைந்து குழி நகம்உருவாகி விடும். நகங்களை வெட்டியதும் மெதுவாக சரிசைய்ய வேண்டும். நகப் பாலிஷ் போடுவதற்கு முன்னால் ஒவ்வொரு விரலுக்கும் இடையில் பஞ்சு பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள்.நகத்தில்கோட்டிங் அடித்து விட்டு தேவையான கலரில் நகபாலிஷ் போடுங்கள்.  இரண்டு அல்லது மூன்று தடவை நகத்திற்கு பாலிஷ் பூசலாம் .முடிந்ததும் அதற்கு மேல் ஒரு தடவை கோட்டிங் செய்யுங்கள்.

பாலிஷ் பளிச் என்றுத் தோன்றும். பின்பு கால்களில் வாஸ்லினை எடுத்து கால்களின் முழுவதும் தடவவும்.அது கால்களுக்கு மினுமினுப்பு தரும்,கால்கள் மென்மையாக இருக்கும். தினமும் உறங்கச் செல்லும் முன் கால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதால் கால்வலி, மூட்டுவலியில்லாமல் நம் கால்களை பாதுகாக்கலாம்.