t> கல்விச்சுடர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 June 2021

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

என் பிள்ளை இன்றிலிருந்து உங்கள் பள்ளிக்கு வருகிறான். அவனுக்கு...

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

- ஆப்ரஹாம் லிங்கன்,
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி.

பகிர்வு செய்தி

JOIN KALVICHUDAR CHANNEL