t> கல்விச்சுடர் தமிழகத்தில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 يوليو 2021

தமிழகத்தில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 வரை திறக்க அனுமதி. ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணவும், டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்தவும் அனுமளி அளிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும்,
நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த
வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும்
 கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 
5-7-2021 முதல் 12-7-2021 காலை 6.00 மணி வரை
தொடர்ந்து தடை
விதிக்கப்படுகிறது.


• மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து

• மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட
வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான
போக்குவரத்து

*திரையரங்குகள்

* அனைத்து மதுக்கூடங்கள்
 நீச்சல் குளங்கள்

• பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல்
சார்ந்த கூட்டங்கள்
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

* உயிரியல் பூங்காக்கள்

* நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண
நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

- இறுதிச் சடங்குகளில், 20
நபர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்


கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் ஒரு சில
கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.

. அரசு, மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி
நிகழ்வுகள் |Fusiness to Fusiress Fxhibitions) நடத்த
அனுமதிக்கப்படும்.  உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள்
மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

 இந்த அரங்குகளில்
பொருட்காட்சி அமைப்பாளர் மற்றும் விற்பனைக் கூடங்களின்
உரிமையாளர்கள், பணியாளர்கள், கட்டாயம் RTPCR பரிசோதனை அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி
செலுத்தியிருக்க வேண்டும்.


* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள்
மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6.00
மணி முதல் மாலை 8.00 மணி வரை, உரிய காற்றோட்ட
வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்
பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு
அருந்த அனுமதிக்கப்படும்.


தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி
ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர்
அருந்த அனுமதிக்கப்படுவர்.


• கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சி கூடங்கள்,
விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரொனா தடுப்பு
நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.


தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை
நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க
அனுமதிக்கப்படும்.

* தங்கும் விடுதிகள். உறைவிடங்கள் |Hotels ard Lodges).
விருந்தினர் இல்லங்கள் (Guest Houses! செயல்பட
அனுமதிக்கப்படும். அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும்
தங்குமிடங்களில் 50% வாடிக்கையாளர்கள்
மட்டும் அனுமதிக்கப்பவர்.


அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட
சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல்
மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள்
உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நோத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் 
மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

. டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00)மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு
நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

* அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய
காற்றோட்ட
வசதியுடன், ஒரு நேரத்தில்
வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

- வணிக வளாகங்கள் (Shoppirg Complex ! Malls) காலை
9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட
அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள
உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த
அனுமதிக்கப்படும். 

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு
அனுமதி இல்லை.

• மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது
பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு
நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும்,
50%, இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க
அனுமதிக்கப்படும்.

SRF/JRF, M.Phil Phd., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள்
கல்வி சார்ந்த பணிகளை {Educatioral Project works
தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்
மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களின் கல்வி சார்ந்த
பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
செயல்பட அனுமதிக்கப்படும்.


அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற
அரசு பயிற்சி நிலையங்கள் மையங்கள், உரிய காற்றோட்ட
வசதியுடன், 50%
பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும்
வகையில், செயல்பட அனுமதிக்கப்படும்.
பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment !
Amusement Parks 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும்
செயல்பட அனுமதிக்கப்படும் .

முகக் கவசம் அணிதல், கிருமி
நாசினி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாக
கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த பூங்காக்களில், திறந்த
வெளியில் நடத்தப்படும்
விளையாட்டுக்கள்
மட்டும்
அனுமதிக்கப்படும் தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு
(water sports) அனுமதி இல்லை.


* மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ்/இ-பதிவு
நடைமுறை இரத்து செய்யப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL