t> கல்விச்சுடர் மலச்சிக்கலை குணமாக்கும் வாழைத்தண்டு பச்சடி செய்முறை! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 يوليو 2021

மலச்சிக்கலை குணமாக்கும் வாழைத்தண்டு பச்சடி செய்முறை!


சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். சரி, இப்போது வாழைத்தண்டு பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

கடுகு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

தயிர் – ஒரு கப்

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

சீரகம் – அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:


வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும்.

அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி…!!




JOIN KALVICHUDAR CHANNEL