. -->

Now Online

FLASH NEWS


Sunday 19 September 2021

மருத்துவ குணங்கள் நிறைந்த கோங்குரா தொக்கு செய்வது எப்படி?




உடலுக்கு வலு சேர்க்க உணவுகளால் தான் முடியும். சில உணவுகள் நம்மை பலபடுத்தும். அந்த வகையில் கீரை வகைகள் பல நன்மைகள் அளிக்க வல்லது.


தேவையான பொருட்கள்:

கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு

கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 20

புளி - எலுமிச்சை அளவு

சீரகம் - ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.
 

செய்முறை:

கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

இதை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி விடவும்.