. -->

Now Online

FLASH NEWS


Wednesday 13 October 2021

அரிசி, உளுந்து இல்லாமல் 10 நிமிடத்தில் இந்த இட்லியை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்





*செய்முறை

முதலில் 250 கிராம் அளவு பாசிப்பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அந்த பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 30 லிருந்து 45 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பாசிப்பருப்பு ஊறிய பிறகு, தண்ணீர் ஊற்றி மூன்று முறை கழுவி விடுங்கள். தண்ணீரை சுத்தமாக வடித்து விடுங்கள். ஊறிய பாசிப்பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு 150ml அளவு புளித்த தயிரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு மொழு மொழுவென அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் ஊற்றி அரைத்தால் சரியான பக்குவத்திற்கு மாவு கிடைத்து விடும். 


அரைத்த மாவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். இதற்குள் ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ஒரு ஸ்பூன் கடுகு தாளித்து, அதில் பத்து பதினைந்து முந்திரி பருப்புகளை உடைத்துப் போட்டு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை போட்டு தாளித்த இந்தப் பொருட்களை ஊறிக் கொண்டிருக்கும் பாசிப்பருப்பு இட்லி மாவுட சேர்த்து விட வேண்டும். அடுத்தபடியாக இந்த மாவில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை உங்களுக்கு தேவையான அளவு போட்டு, நன்றாக கலந்து விட்டால் இட்லி வார்ப்பதற்கு மாவு தயார். இட்லி தட்டில் கொஞ்சமாக நெய் தடவி விட்டு, அதன் பின்பு இந்த இட்லி மாவை ஊற்றி, எப்போதும்போல ஆவியில் வைத்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வேகவைத்து பாருங்க. பஞ்சு போல இட்லி உடனடியாக தயாராகியிருக்கும்.

 
இதற்கு தொட்டுக்கொள்ள சைவமாக இருந்தால் காரசாரமான சட்னி, குழம்பு எதை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அசைவமாக இருந்தால் சிக்கன் குழம்பு மட்டன் குழம்புக்கு இந்த இட்லிய அடிச்சுக்க வேற எதுவுமே கிடையாது. அந்த அளவுக்கு சூப்பர் ரெசிபி இது. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பருப்பில், செய்யக்கூடிய ரெசிபி என்பதால் குழந்தைகளுக்கும் இதை தாராளமாக கொடுக்கலாம். ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இட்லி ஆறுவதற்குள் சாப்பிட்டு விடுங்கள். ஆறிவிட்டால் இந்த இட்லி கொஞ்சம் கல்லு போல மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இந்தக்  குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.


​​​​​​​​