. -->

Now Online

FLASH NEWS


Friday 15 October 2021

மருந்து வாங்கும் போது காலாவதி தேதியை மட்டும் அல்ல... 'இதையும்' கவனிக்க வேண்டும்.




மருந்து வாங்கும் போது, ​​நம்மில் பலர், மருந்து அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலாவதி தேதியை மட்டும் தான் பார்க்கிறோம்.


மருந்து அட்டையில் உள்ள ​​பிற குறியீடுகளை கவனிக்க தவறுகிறோம். அவை மிகவும் முக்கியமானவை. இந்த குறியீடுகளை வைத்து அந்த மருந்தை வாங்க வேண்டுமா இல்லையா அல்லது மருந்து போதை மருந்தா, இல்லையா என்பது பற்றிய முக்கியமான தகவல்களை அளிக்கிறது. இன்று, மருத்து முக்கியமான குறியீடுகள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

XRx குறி: 

பொதுவாக மனநல கோளாறுகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் XRx என எழுதப் பட்டிருக்கும். இதில் சிறிதளவு போதை தரும் மருந்துகள் இருக்கும். இந்த மருந்துகளை, மருந்துவர் பரிந்துரை இல்லாமல், இந்த மருந்துகளை விற்க முடியாது. மேலும், மருந்து விற்பனை செய்யும் போது, ​​மருந்து கடைக்காரர் 2 வருடங்களுக்கு மருந்துக்கான பிரிஸ்கிரிப்ஷனின் நகலை வைத்திருக்க வேண்டும்.


NRx குறி: 

இந்த மருந்துகள் மனச்சோர்வு, பதட்டம் அல்லது மோசமான போதை பழக்கம் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுகின்றன. இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி வாங்கவோ அல்லது மருந்து சீட்டு இல்லாமல் விற்கவோ முடியாது.

Rx குறி: 

இந்த மருந்துகளும் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே எடுக்கப்பட வேண்டும் என்றாலும் அவை பொதுவான மருந்துகள்.

சிவப்பு கோடு: 

மருந்து அட்டையின் மீது சிவப்பு பட்டை இருந்தால், அந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொருளாகும். பொதுவாக இந்த குறியை ஆண்டிபயாடிக் மருந்துகளில் பார்க்கலாம். எனினும் இதனை மருந்துவர் ஆலோசனையில் படியே சாப்பிட வேண்டும்.

பொதுவாகவே, எந்த விதமான மருந்துகளையும் மருத்துவர் ஆலோசனை பெறாமல், சாப்பிடுவது நல்லதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.