. -->

Now Online

FLASH NEWS


Sunday 10 October 2021

கண்ணீரே ஒரு சிறந்த கிருமிநாசினி!




உட‌ல் உறு‌ப்புக‌ளி‌ல் ஒவ்வொன்றும் அதன் தேவைகளை பொறுத்து மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதையடுத்து, அனைத்து உறுப்புகளுமே மனித உடலுக்கு மிக அவசியமாகும்.


இதில், கண்கள் இந்த உலகை பார்ப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. கண் இல்லாத வாழ்க்கையை நம்மால் ஒரு நிமிடம் கூட நினைத்து பார்க்க முடியாது.

அத்தகைய மகத்துவம் மிக்க கண்களை இயற்கையே பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்வது மிக அதிசயமானதும், அற்புதமானதாகவும் உள்ளது. கண்களை சுத்தம் செய்யும் வேலையை, கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீர் செய்கிறது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கண்ணீர்

கண்கள் சிரமமில்லாமல் நகர்வதற்கு கண்களில் ஈரப்பதம் தேவை.

கண்களின் மேல், கீழ் இமைகளை கன்ஜங்டிவா எனும் மெல்லிய இழை இணைக்கிறது.

2 நொடிகளுக்கு ஒருமுறை கண்களை இமைப்பதன் மூலம் கண்களில் உருவாகும் ஈரப்பதம் வற்றாமலிருக்கிறது.

ந‌ம்முடைய க‌ண்க‌ள் எ‌ப்போது‌ம் ஈர‌ப்பதமாகவே இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல், க‌ண்க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் ‌நீர் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன.

இ‌ந்த சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ர், நா‌ம் க‌ண்களை இமை‌க்கு‌ம் போது க‌ண்களை ஈரமா‌க்‌கு‌கி‌ன்றன.

அதே சமய‌ம், அ‌திகமான து‌க்க‌ம், இ‌ன்ப‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு நா‌ம் ஆளாகு‌ம் போது இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள், வழ‌க்க‌த்தை ‌விட அ‌திகமாக ‌நீரை உ‌ற்ப‌த்‌தி செய்‌கிறது. அதுதா‌ன் க‌ண்‌ணீராகு‌ம்.

எப்போது வரும்?

நாம் துக்கமாக இருந்தாலும் கண்ணீர் வரும்.

அதிக சந்தோஷமாக இருக்கும் நேரத்திலும் வரும்.

சில நேரங்களில் சில வார்த்தைகளும், சொல்லும் கூட கண்ணீரை வரவழைக்கும்.

முகத்தில் அதிக வேகமாக காற்று பட்டால் கண்ணீர் வரும்.

வெங்காயம் வெட்டும் போது கூட கண்ணில் கண்ணீர் வரும்.

வறுமையும், கொடுமையும் கூட கண்ணீரை வரவழைக்கும்.

அதிர்ச்சி, ஆனந்தம் மட்டுமல்ல சிரிப்புக்கும் வரும். வயிற்றிலுள்ள தசைகள், முகதசைகள் இணைந்து நாளமில்லா அமைப்பை தூண்டுவதால் தொடர்ந்து சிரிக்கும்போது கண்ணீர் வருகிறது.

கிருமிநாசினி

க‌ண்‌ணீ‌ர் ஒரு சாதாரணமான ஒரு ‌விஷயம‌ல்ல. க‌ண்‌ணீ‌ரி‌ல் ‌கிரு‌மி நா‌சி‌னிக‌ள் உ‌ள்ளன. இவைதா‌ன் க‌ண்களை எ‌ப்போது‌ம் தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன.

மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து, 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.

லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.

கண்ணீரின் நன்மைகள்

கண்ணீர், கண்களுக்கு ஆக்சிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

கண்களில் விழும் பல்வேறு தூசு, துரும்புகளை வெளியேற்ற கண்ணீர் மட்டுமே ஒரே வழியாகும்.

கண்களிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும், நம் மனநிலையை மாற்றவும் கண்ணீர் உதவுகிறது.

அழும்போது உடலில் ஆக்சிடோசின், எண்டோர்பின் வேதிப்பொருட்கள் வெளிவருவதால் மனம் மற்றும் உடல் வலியிலிருந்து எளிதாக வெளிவர முடிகிறது.

பெண்கள் அதிகம் அழுவதற்கு

ஆண்களை விட பெண்கள் அதிகம் அழுவதற்கு, அவர்களின் உடலிலுள்ள 60 சதவிகித புரோலேக்டின் வேதிப்பொருளே காரணம்.

நாளமில்லா சுரப்பிகளை இவைகளே தூண்டி பெண்கள் சிறுசிறு துளிகளாக கண்ணீரை சிந்த வைக்கின்றன.