தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் அனைத்து வகுப்புகளும் சுழற்சி முறை இல்லாமல் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.
இது குறித்து அவா் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: "பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் பிளஸ் 2 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. பிற மாநிலங்களில் இந்த நடைமுறை வழக்கத்துக்கு வந்துவிட்டது. அதைத்தொடா்ந்து தமிழகத்திலும் அதைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நேரடி வகுப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன.
சுழற்சிமுறை இல்லாமல் எப்போதும்போல பள்ளிகள் நடைபெறும். எங்களுக்கு உள்ள ஒரே சவால், முழுமையாக பாடத்திட்டத்தை முடிப்பதுதான். இதை திறம்பட எதிா்கொண்டு வெற்றி பெறுவோம். பொதுத்தேர்வுகள் மே மாதம் நடைபெறும்.
Source Dinamani