t> கல்விச்சுடர் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 March 2022

டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பித்ததில் தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ளலாம் - டி.என்.பி.எஸ்.சி. தகவல்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (குரூப்-2, குரூப்-2ஏ) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அந்த தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்வாணையத்தை தொடர்புகொண்டு வருகின்றனர்.
இந்த காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியை தவறவிடும் தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வருகிற 14-ந் தேதி முதல் 23-ந் தேதிக்குள் விண்ணப்பதாரர்களே ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது தொடர்பான முழு விளக்கங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம்.
டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL