t> கல்விச்சுடர் ஆதரவற்ற முதியவர் மரணம் தன்னடக்கம் செய்த சமூக ஆர்வலர்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 January 2023

ஆதரவற்ற முதியவர் மரணம் தன்னடக்கம் செய்த சமூக ஆர்வலர்!



தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடியம்பாளையம் கிராம பேருந்து நிறுத்தத்தின் அருகில் 70 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் மயங்கி விழுந்த நிலையில் இருந்தவரை காவல்துறையினர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க பட்டு இருந்தவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

மேற்படி நபரை குறித்து தொட்டியம் காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்த போது இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோடியம்பாளையம் கிராமத்தில் ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்ததாக தெரியவருகிறது. மேற்படி நபரின் உறவினர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இவரின் உடலை யாரும் உரிமை கூறாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தொட்டியம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரசுராமன் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சிறப்பு உதவியாளர் பரசுராமன் முன்னிலையில் குழுமிக்கரை மயானத்தில்
யோகாசிரியர் விஜயகுமார்
 நல்லடக்கம் செய்தார்

JOIN KALVICHUDAR CHANNEL