ஐ.பி.எல் பத்தாவது சீசனின் முதல் எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கும் பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐ.பி.எல் பத்தாவது சீசனில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிபயர் போட்டியில் புனே அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இன்று பெங்களூரில் நடைபெற இருக்கும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை செய்கின்றன. போட்டி நடைபெற இருக்கும் பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. போட்டி தடைபட்டால் என்ன ஆகும்; ஒருவேளை இன்றைய போட்டி தடைபெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் 3அது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி 2வது தகுதி சுற்று போட்டி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும், புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா வெளியேறும் நிலை ஏற்படும்.
அதே போல் அடுத்த போட்டியான 2வது தகுதிச்சுற்று போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால், முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெற்று புனே அணியுடன் மோதும்.
ஆனால் தற்போது மழை நின்று விட்டதால் போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.