. -->

Now Online

FLASH NEWS


Tuesday 19 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.03.2024



திருக்குறள்:

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.


விளக்கம்:

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.

பழமொழி :
Prevention is better than cure

வருமுன் காப்பதே சிறந்ததே


இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

நீங்கள் ஒரு மனிதனின் மனதை அறிய விரும்பினால், அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். --ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே

பொது அறிவு :

1. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?


விடை: தாய்லாந்து 

2. வெங்காயத்தில் அதிகளவு உள்ள வைட்டமின் எது? 
வைட்டமின் C

English words & meanings :

 Ubiquitous - Omnipresent; எங்கும் நிறைந்தது.
Unbiased - fair; பாரபட்சமற்ற.
ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை: உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. எவ்வளவு மோசமான புண்கள் இருந்தாலும், அதை காசினி குணப்படுத்திவிடும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும்.

நீதிக்கதை

 தீவினை அச்சம்

தீய செயல்களைச் செய்வதற்குப் பயப்படுதல்

ஆலமரத்தில் இருக்கும் பறவையைக் கொல்லும் பொருட்டு வேடன் குறிபார்த்துத் தன் வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றான். மேலே பார்த்துக்கொண்டே வந்ததால் கீழே புற்று உள்ளதை அறியாமல் புற்றின்மேல் காலை வைத்து அழுத்தினான். அழுத்தியதனால் புற்று மண் இடிந்து உள்ளே உள்ள நாகத்தின்மேல் விழுந்தது. மண் விழுந்ததும் நாகம் சீறி மேலெழும்பிப் புற்றில் கால்வைத்திருந்த வேடனைத் தீண்டியது. நாகம் தீண்டியதை அறிந்த வேடன், "நாம் அப்பறவையைக் கொல்ல, வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றோம்; அம்முயற்சியாகிய தீய செயலே, 'தன் நிழல் தன்னை விடாது' என்ற முதுமொழிப்படி நம்மை நாகமாக வந்து தீண்டியது" என்று தான் செய்த தீமைக்கு வருந்தி இறந்தான். இதை வள்ளுவரும் தீய காரியங்களைச் செய்தவர் கெடுதல் அவர் நிழல் அவர் பாதத்தை விட்டு விலகாமல் அவர் பாதத்திலே தங்கியிருப்பதைப் போலாகும் என்று கூறியுள்ளார்.

இன்றைய செய்திகள்

19.03.2024


*தேர்தல் நடத்தை நெறிமுறை: பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல வேண்டும்- ராதாகிருஷ்ணன்

*ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி; 88% வாக்குகள் பெற்றார்.

*எகிப்துக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித்தொகை; ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.

*2வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

 *Election code of conduct: Public should carry money with proper documents- Radhakrishnan

 *Putin won in the Russian presidential election; He got 88% of the votes.

 *US$8 billion given as aid to Egypt; EU Declared.

 *Royal Challengers Bangalore team won the title of "Champions" in the 2nd Women's Premier League 20 Overs Cricket Tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Monday 18 March 2024

தலைமை ஆசிரியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல்வேறு கட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் தலைமை ஆசிரியர்களுக்கான (31-40 தொகுதி) பயிற்சி முகாம், இன்று (மார்ச் 18) தொடங்கி ஏப்ரல் 27-ம் தேதி வரை மதுரையில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. 

இந்த பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

 மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2023



திருக்குறள்:

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

விளக்கம்:

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

பழமொழி :
Practise makes man perfect

சித்திரமும் கைப்பழக்கம்


இரண்டொழுக்க பண்புகள் :

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

மனிதர்களால் தங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். --வில்லியம் ஜேம்ஸ்

பொது அறிவு : 

1.இசைக்கருவிகளின் இராணி என்றழைக்கப்படும் இசைக்கருவி எது? 

வயலின். 


2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?


விடை: ஆறு கால்கள் 
English words & meanings :

 Tangible - definite; உறுதியான.
 Trivial -a little value or importance; அற்பமானது.
ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை : சினிக்கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி உள்ளதால் மிகுந்த சத்துகளின் கீரையாக திகழ்கிறது.

நீதிக்கதை

 நிலையாமை



தோன்றும் பொருள்கள் அழியுந்தன்மை



"ஒரு செல்வன் தான் தன் காலத்தில் தேடிய செல்வங்களை அறம் செய்யலாம்" என்று சம்பாதித்தவற்றைப் பொன்னாக மாற்றி அவற்றை உருண்டையாகச்செய்து பானையில் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஒருநாள் திடீர் என்று நாக்கு இழுத்து மேல் கிளம்பியது, அந்நேரத்தில் பேசமுடியாமையால் கையை வளைத்து "உருண்டை பொன் இருக்கிறது, எடுத்துவாருங்கள்"அறம் செய்யவேண்டும்" என்று அருகில் இருந்த உறவினர்களிடம் காட்டினான். இவ்வுண்மையறிந்த அவன் மனைவி, புளி உருண்டை வேண்டும் என்கிறார். மருத்துவர் புளியே தொடக் கூடாது என்று சொல்லியுள்ளார். அது இப்போது தொடக்கூடாது என்றாள். இதைக்கேட்டு, 'நல்லறிவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தர்மம் செய்யாது இருந்தோமே' என்று வருந்தி இறந்தார். இதனால் எந்தக்காலத்தில் இந்தச் சரீரம் நீங்கும் என்பது யாவருக்கும் தெரியாமையால், "யாவரும் நல்லறிவுடன் இருக்கும்போதே நல்ல காரியங்களைச் செய்து முடித்தல் வேண்டும்" என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.



நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.

இன்றைய செய்திகள்

18.03.2024

*அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதிக்கு மாற்றம்.

*மேற்கு மாம்பலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீருக்கு மாதம் பத்தாயிரம் செலவழிப்பதாக மக்கள் வேதனை.

*மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை வருமான வரித்துறை ஏற்பாடு.

*கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்தானதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.

*ஐ.பி.எல்.முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதல்..... இன்று ஆன்லைனில் டிக்கெட் விற்பனை.

*மியாமி ஓபன் டென்னிஸ்: நம்பர் ஒன் வீரர் ஜோகோ விச் விலகல்.

Today's Headlines

*Counting of votes in Arunachal Pradesh, Sikkim shifted the date is changed to June 2.

 *Severe shortage of drinking water in West Mambalam: People are suffering as they spend ten thousand rupees per month for water.

 *Income Tax Department arranged control room for 24-hours in connection with Lok Sabha elections.

 * 44 electric trains were cancelled due to track maintenance work between Kodambakkam and Tambaram. This leads to increased number of passengers in buses.

 *CSK-RCB clash in first match…..Ticket sold through online today.

 *Miami Open tennis: No. 1 player Joko Wich withdraws.
 

Friday 15 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.2024




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

விளக்கம்:

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.


பழமொழி :
He who eats crumbs will live a hundred years.

நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான். 


இரண்டொழுக்க பண்புகள் :

 1. கல்வியும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

உனக்காகப் பொய் சொல்லுபவன் உனக்கு

எதிராகவும் சொல்வான்.

-இங்கர்சால்

பொது அறிவு : 

1. உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது? 


விடை: பந்தய குதிரை

2. ஜப்பானின் தலைநகரம் எது? 

விடை: டோக்கியோ 
English words & meanings :

 Spontaneous- automatic ;தன்னிச்சையான.
  shrewd- clever ;புத்திசாலி.
ஆரோக்ய வாழ்வு : 

குப்பை மேனி கீரை : சுவாச நோய்களுக்கு சுக்கு மிளகு திப்பிலி சித்தரத்தை ஓமவல்லி துளசி யுடன் குப்பைமேனி சேர்த்து கசாயம் வைத்து குடிக்கலாம்.

மார்ச் 15

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது.
நீதிக்கதை

 மன்னனின் ஆணவம்


மகாராஷ்டிரத்தின் பெரு வீரராக விளங்கிய ஒரு மன்னன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈடுபடுத்தி ஒரு அழகான பெரிய கோட்டையைக் கட்டினார். இருந்தாலும் அவர் சிறிது கர்வம் மிகுந்தவர். அத்தனை தொழிலாளி களுக்கும் உணவு அளித்தார். அவர்கள் யாவருக்கும் தான் தான் இலவசமாக உணவு அளிப்பதாகக் கர்வம் கொண்டிருந்தார். மன்னனின் குருநாதர் இந்த கெட்ட எண்ணத்தைக் கவனித்து விட்டு, மன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஒரு நாள் குரு மன்னனின் அரண்மனைக்கு வந்தபொழுது, வழக்கம் போல் அவனை வானளாவப் புகழ்ந்தார்.
"மகராஜ்! எல்லாப் பணிகளும் தங்கள் கருணையால் தான் நடக்கிறது." என்று கூறினார். அதைக் கேட்டு மன்னனும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். பிறகு குருவானவர், மன்னனிடம் ஒரு கல்லைக் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார். எதற்காக குரு தன்னைக் கல்லை உடைக்கச்
சொல்கிறார் என்ற சந்தேகம் எழுந்தாலும், மன்னனும்
ஆர்வமாக அந்தக் கல்லை உடைத்தார். அட! என்ன
ஆச்சரியம் ! அதிலிருந்து ஒரு தேரை துள்ளிக் குதித்துத் தாவித் தாவிச் சென்றது. அந்தக் கல்லிலிருந்து நீரும் வடிந்தது. மன்னன் அதை விநோதமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
"மன்னா! ஒன்று கேட்கிறேன்.சொல்ல முடியுமா?" என்று குரு கேட்டார்.
"சொல்லுங்கள் குருவே! காத்திருக்கிறேன்" என்றான் மன்னன்.
"மன்னா! இந்தக் கல்லுக்குள் இருந்த தேரைக்கு யார் உணவளித்தார்கள் என்று கூறமுடியுமா?" என்று கேட்டார் குரு .
குரு கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். உடனே வெட்கித் தலை குனிந்தார் மன்னர்.
"குருவே! என்னை மன்னித்துவிடுங்கள். எல்லா வற்றிற்கும் மேலாக இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவன்தான் இப்படியாக செய்கிறார் என்பதும் உண்மை. அவன் தூண்டிவிட்டதினால்தான் நான் யாவருக்கும் உணவுஅளித்தேன். இறைவன் இல்லாது ஒரு செயலும் நிகழாது. என்னை மன்னித்து விடுங்கள். என் கர்வம் அகன்றது" என்று கூறி தான் எல்லாவற்றிற்கும் ஒரு கருவிதான் என்பதை உணர்ந்து கொண்டான்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனால் செய்யப்படுகிறது. அதற்கு நம்மைக் கருவியாக அமைக்கிறான் இறைவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்

15.03.2024

*5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார் பூடான் பிரதமர்.

*இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பம்; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

*மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளில் டாக்டர்களுக்கு பரிசுகள் தரக்கூடாது; மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

*டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.

*ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் 
பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி.

*இந்தியன் வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ், சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Bhutan Prime Minister arrived in India yesterday on a 5-day visit.

 * Application for citizenship, for the children born in Sri Lankan Tamil refugee camps; High Court ordered the Central Govt.

 *The Central government's new norms for drug marketing practices included that no gifts should be given to doctors; the Central government ordered pharmaceutical companies.

 *Bill to ban TikTok app: passed in US Parliament.

 *All England Badminton second round: 
 P.V. Sindhu is defeated

 *Indian Wells Open: Medvedev, Sinner advanced to quarterfinals.

 Prepared by

Covai women ICT_போதிமரம்


உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது இந்த 21 வாக்கியங்களை நினையுங்கள்..


உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது இந்த 21 வாக்கியங்களை நினையுங்கள்..

1)போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.

(2) நல்ல வேளை. இதோடு போச்சு.

(3) உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு..

(4) பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

(5) பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல...

(6) சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க.... எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

(7) இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது....

(8)கஷ்டம் தான்… ஆனா முடியும்.....

(9) நஷ்டம் தான்… ஆனா மீண்டு வந்திடலாம்...

(10) விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

(11) இவன் இல்லேன்னா என்ன? நமக்கு வேற ஆளே இல்லயா?

(12) இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

(13) இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு...

(14) இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

(15) முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

(16) கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்....

(17) திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.....

(18) ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா தான் இருக்கணும்....

(19) கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை....

(20) எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

(21) அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்...

வீழ்வது கேவலமல்ல நண்பர்களே.....

வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்....

உங்கள் மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு நீங்கள் செயல்படுவீர்கள் ....!

Thursday 14 March 2024

TNSED SCHOOLS APP NEW UPDATE Version 0.98 DOWNLOAD LINK ATTACHED




Kalai Arangam & Noon meal term 3 changes added.

Bug fixing & performance improvements.


TRB மூலம் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான பாடத்திட்டம் (Syllabus) வெளியீடு!


TRB மூலம் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான பாடத்திட்டம் (Syllabus) Download Here