. -->

Now Online

Wednesday, 19 May 2021

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் காலமானார்
இரங்கல் செய்தி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும்,
ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு
உறுப்பினரும்,
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம்,
சடையங்குப்பம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
திரு ஏ.இரமேஷ் அவர்கள்
சென்னை தனியார் மருத்துவமனையில்,
கடந்த 16 நாட்களாக
கொரானா தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,

18/05/2021அன்று இரவு 9.40 மணியளவில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆசிரியர் அரசு ஊழியர்கள் போராட்டங்களை சிரத்தையுடன் முன்னெடுத்து வழிநடத்தியவர்.

தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட
சுமார் 53 ஆயிரத்திற்கும் ஆசிரியர்களுக்குகாலமுறை ஊதியம் பெற்றிட அயராது பாடுபட்டவர்.

தலைவர் கலைஞர்
தமிழக முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்களின் வாழ்வாதார நிதியினை திரட்டி முதல்வரிடம் வழங்கிட சிரத்தையுடன் செயல்பட்டவர்.

காலமுறை ஊதியம் வழங்கப்பட்டதற்காக கடந்த 2007 ஆம் ஆண்டு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முத்தமிழ் அறிஞர் , டாக்டர். கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற பிரமாண்டமான நன்றி அறிவிப்பு மாநாட்டினை செம்மையாக ஒருங்கிணைத்தவர்.

சமூக செயற்பாட்டாளராக பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் *தமது சொந்த நிதியில் பள்ளி மாணவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வந்தவர்.

சென்னை வெள்ளம், கஜா புயல், நீலகிரி வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் மக்களுக்கு நிவாரண உதவிகளை சங்கம் வழங்குவதற்கு உதவிகரமாக இருந்தவர்.

சங்கங்கள் கடந்து ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியவர்.

மாண்புமிகு.
தமிழக முதலமைச்சர் தளபதியார் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டவர்.
தேர்தலுக்கு முன்பு அந்நாளைய எதிர்க்கட்சித் தலைவரும்
தற்போதைய முதலமைச்சருமான மாண்புமிகு தளபதியார்
அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்வை முன்னெடுத்து சிறப்பாக நடத்திக் காட்டியவர்.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்காக தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர்.

அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அளவில்லாத பற்று கொண்டு மாணவர்களின் கல்விநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

கடந்த கொரானா முதல் அலையின் போது தன்னுடைய பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கடைசிவரை சமூகத்திற்கும் , சங்கத்திற்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளவராக இருந்த எங்கள் பொதுச்செயலாளரின் பேரிழப்பை ஈடுசெய்ய இயலாமல் தவிக்கிறோம்.


வேதனையுடன்...
கு.தியாகராஜன்.

மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ ஜியோ.

மற்றும்

மாநில , மாவட்ட , ஒன்றிய பொறுப்பாளர்கள்,
TAMS

அன்னாரின் மறைவுக்கு கல்விச்சுடர் இணைய தளம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது

Tuesday, 18 May 2021

தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கொரோனா மரணம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இன்று ஒரே நாளில் 364 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். மேலும் 21,262 பேர் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

2050க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் பலி - பகீர் தகவல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட மனுக்களில்- 549 கோரிக்கைகள் நிறைவேற்றம்.
வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆய்வு அறிக்கை !!வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆய்வு அறிக்கை !! CLICK HERE TO DOWNLOAD

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: மே 20-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!


பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வரும் 20 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
 சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, கொரோனா பரவல் தடுப்பு மையம் பல பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 4,300 படுக்கைகள் காலியாக உள்ளன. மக்கள் இதைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி வைக்கிறார். தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
 கூடுதல் தடுப்பூசிகள் வர இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகள் ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் காலியாக உள்ளது. முதலமைச்சர் பல மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வர வைத்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்து வருகிறார்.
 ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. போலி மருந்துகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம்!

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் - ககன் தீப்சிங் பேடி.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம்-சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரிக்கை.

முதல் முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும்.

அடுத்தகட்டமாக மாநகராட்சியின் கொரோனா மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

வீட்டுத் தனியமையில் இருப்பவர்கள் வெளியேறினால் 044-25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.