குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்து TNPSC அறிவித்துள்ளது.
குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலைத் தேர்வு ஒன்றாகவும், பிரதானத் தேர்வு தனியாகவும் நடைபெற உள்ளது. குரூப் 1, 2, 4 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ஒருங்கிணைந்த தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இதில், 6244 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9இல் நடைபெறுகிறது.