. -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages

FLASH NEWS


.

Tuesday 12 February 2019

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60-ஆக அதிகரிக்க தமிழக அரசு முடிவு?



தமிழக அரசுக்கு எதிராக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் தற்காலிக முடிவுக்கு வந்திருந்தாலும் விரைவில் மீண்டும் போராட்டம் தொடங்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஏதேனும் அறிவிப்பு வரும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் பட்ஜெட்டில் அறிவிக்காத சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.குறிப்பாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் இந்தச் சட்டசபைக் கூட்டத்தொடரிலே தங்களுக்கும் அறிவிப்பு ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

இன்னும் இரண்டு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அரசு ஊழியர்களைக் குளிர்விக்கும் அறிவிப்பை அரசு அறிவிக்கப்போகிறது என்று கிசு கிசுக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.``தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். அந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் எண்ணத்தில் உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரிலியே இந்த அறிவிப்பை முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.அரசு ஊழியர்களைக் கூல் செய்ய இந்த அறிவிப்பு வெளியாகலாம். இதுகுறித்த உறுதியான தகவல்கள் விரைவில் வெளியே வரும்” என்று ஆச்சர்ய தகவல்களைச் சொல்கிறார்கள்.