t> கல்விச்சுடர் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

18 December 2019

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கி மார்ச் 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில், 137 வகையான பாடப்பிரிவுகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதில், 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது. விடைத்தாளின் முதல் பக்கத்தில் பெயர், பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதற்காக 10.15 மணி வரை 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படுகிறது. வினாத்தாளை வாசிப்பதற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. பின்னர் 10.30 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL