t> கல்விச்சுடர் டிசம்பர் 31ம் தேதிக்குள் இது முடிவுக்கு வருகிறதாம்! உஷாரா இருங்க எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களே! - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

10 December 2019

டிசம்பர் 31ம் தேதிக்குள் இது முடிவுக்கு வருகிறதாம்! உஷாரா இருங்க எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களே!


SBI New EMV chip and PIN Debit Card : தற்போது புழக்கத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் மேக்னடிக் ஸ்ட்ரிப் ஏ.டி.எம். கார்டுகளின் செயல்பாடுகள் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி முடிவுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது அந்த வங்கி நிர்வாகம். பொதுவாக வங்கிகளில் நமக்கு தரப்படும் ஏ.டி.எம் கார்ட்கள் மேக்னடிக் ஸ்டிரிப்ஸ் எனப்படும் காந்த புலம் கொண்டு இயங்கும் கார்ட்களாகவே இருக்கும்.





சமீபத்தில் அனைத்து வங்கிகளும் மேக்னடிக் ஸ்டிரிப்ஸ்களுக்கு பதிலாக ஈ.எம்.வி (Europay, Mastercard, and Visa) மற்றும் பின் நம்பர்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் கார்ட்களை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் கார்ட்கள் அனைத்தையும் கட்டணம் ஏதுமின்றி ஈ.வி.எம் கார்ட்களாக மாற்றிக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.



வருகின்ற 31ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கியின் பழைய கார்ட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளில் கொடுத்துவிட்டு புதிய கார்ட்களை வாங்க அறிவுறுத்தியுள்ளது, மேலும் பழைய கார்டுகளை மாற்றாத வாடிக்கையாளர்கள் அதே கார்டுகளை கொண்டு பண பரிவர்த்தனை செய்ய இயலாது. அனைத்து கார்டுகளும் டி- ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ.



JOIN KALVICHUDAR CHANNEL