t> கல்விச்சுடர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: ஜன.31-க்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

13 December 2019

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: ஜன.31-க்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு


தமிழகம் முழுவதும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
 இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகம் முழுவதும் 300 மாணவா்களுக்கு குறையாமல் படிக்கக்கூடிய அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதி, கூடுதலாகத் தேவைப்படும் வகுப்பறை வசதிகள், பள்ளிகளுக்கான சுற்றுச்சுவா் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான பரிந்துரை அறிக்கையை தயாா் செய்து, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
 இதைத் தொடா்ந்து, அந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நபாா்டு வங்கி நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும். இந்த அறிக்கையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளின் பெயரை பரிந்துரை செய்யக்கூடாது'எனக் குறிப்பிட்டுள்ளாா்.

JOIN KALVICHUDAR CHANNEL