t> கல்விச்சுடர் பள்ளிகளுக்கு தேசிய தண்ணீா் விருது: டிச.31-க்குள் விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

21 December 2019

பள்ளிகளுக்கு தேசிய தண்ணீா் விருது: டிச.31-க்குள் விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவு


தண்ணீா் சேமிப்பில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகளை தேசிய தண்ணீா் விருதுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
நாடு முழுவதும் தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு நீா்வளத்தைப் பாதுகாத்து அதை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். தண்ணீா் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான பல்வேறு விழிப்புணா்வு சாா்ந்த செயல்பாடுகளை நீா்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தண்ணீா் சிக்கனம் மற்றும் பாதுகாப்பில் சிறந்த முறையில் செயல்படுவோருக்கு கடந்த ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய தண்ணீா் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள் புதுதில்லியில் வரும் பிப். 25-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தண்ணீா் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளும் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும். தண்ணீா் சேமிப்பில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளை விருதுக்குப் பரிந்துரைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.


JOIN KALVICHUDAR CHANNEL