சேலம் மாவட்டம், பெ.நா.பாளையம் ஒன்றியம், மண்ணூர் நடுநிலைப் பள்ளியில் தேசிய கணித தினத்தை முன்னிட்டு கணித புலிகள்-கணித மன்றம் வெள்ளிக்கிழமை (20.12.2019) அன்று திறப்பு விழா செய்யப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன் மற்றும் பொதுமக்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து சீனிவாச ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றையும், கணித சாதனைகள் குறித்தும் மாணவர்களுக்கு கூறி, காணொலிகள் காண்பிக்கப்பட்டது.
▪20 வாய்பாடுகளை நேராக, தலைகீழாக மற்றும் இடையிடையே சொல்லிய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும், கேடயமும் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவர்களை ஊர் பொதுமக்கள் வாய்பாடு கேட்டனர். மாணவர்கள் சொன்ன விதம் பார்த்து மாணவர்களை பாராட்டிச் சென்றனர்.
▪கணித மேதைகள் குறித்த பேச்சு, வர்க்க வாய்பாடு, கணித பாடல்கள் என மாணவர்கள் அசத்திய விதம் ஊர் பொதுமக்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
▪கணித பாடப்பகுதியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்ட கணித மன்றத்தினை சிறப்பாக செயல்படுத்த மாணவர்கள் மத்தியில் கூறப்பட்டது.
தகவல்:
ப.சக்திவேல்
.