t> கல்விச்சுடர் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது: ராமதாஸ் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

10 December 2019

பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னை: பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை எக்காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.3 ஆயிரம் கோடியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதி குறைப்பு மிகவும் கவலையளிக்கிறது.
பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.56,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது தாராளமான நிதி ஒதுக்கீடு அல்ல. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு ஆண்டுக்கு 10% என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தான் கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான ரூ.50,113 கோடியிலிருந்து 10% அதிகரித்து, நடப்பாண்டுக்கான நிதி ஒதுக்கீடு நிா்ணயிக்கப்பட்டது. இதைக் குறைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு நிதியமைச்சகம் அழுத்தம் கொடுத்து சாதிக்க நினைப்பது கல்வித் துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு நாடு நீடித்த வளா்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய 3 முதன்மைத் துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கல்வி வளா்ச்சி குறித்து ஆராய அமைக்கப்பட்ட கோத்தாரி குழுவும் இந்த உண்மையை மனதில் கொண்டுதான், கல்வித் துறைக்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செலவிட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
இன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 210 லட்சம் கோடி ஆகும். கோத்தாரி குழு பரிந்துரைப்படி கல்விக்காக மட்டும் ரூ.12.60 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக செலவிடும் ரூ.4.5 லட்சம் கோடி, அதாவது உற்பத்தி மதிப்பில் 2 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகையிலும் ரூ.3 ஆயிரம் கோடியைக் குறைப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும் என்று அவா் கூறியுள்ளாா்.


JOIN KALVICHUDAR CHANNEL