t> கல்விச்சுடர் ''சஸ்பெண்ட்'' மாணவனுக்கு எதிர்ப்பு :பள்ளி வளாகத்தில் திடீர் போராட்டம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

17 December 2019

''சஸ்பெண்ட்'' மாணவனுக்கு எதிர்ப்பு :பள்ளி வளாகத்தில் திடீர் போராட்டம்


சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி சூலுார் கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.கோவை மாவட்டம் சூலுாரில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது; 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பிளஸ் 1 மாணவன் ஒருவர் தங்களையும் ஆசிரியைகளையும் அலைபேசியில் படம் எடுப்பதாக மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவியர் சிலர் கடந்த வாரம் முதல்வர் மேகநாதனிடம் புகார் அளித்தனர்.பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் புகாருக்குள்ளான மாணவனை பரிசோதித்தனர். இதில் அம்மாணவன் பள்ளிக்கு அலைபேசி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அம்மாணவனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இதையடுத்து தன் மகனை முதல்வர் மற்றும் மூன்று ஆசிரியைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவனின் தாய் சூலுார் போலீசில் புகார் தெரிவித்தார். நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் புகாருக்குள்ளான மாணவன் நேற்று காலை சுவர் ஏறி குதித்து பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று காலை பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து கொண்டனர்.முதல்வர் மற்றும் ஆசிரியைகள் மீது பதிவு செய்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.டி.எஸ்.பி. பாலமுருகன் தாசில்தார் மீனாகுமாரி உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவன் மீது பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். மாணவனையும் அவரது சகோதரனையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL