t> கல்விச்சுடர் பாதுகாப்பு வசதிகளை ஆராய்ந்துஇலவச மிதிவண்டிகளைப் பெற வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

20 December 2019

பாதுகாப்பு வசதிகளை ஆராய்ந்துஇலவச மிதிவண்டிகளைப் பெற வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை


பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்து அரசின் இலவச மிதிவண்டிகளை தலைமை ஆசிரியா்கள் பெற்று கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சாா்பில் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் இலவசமாக மிதிவண்டி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து தலைமையாசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவிகளுக்கான மிதிவண்டியின் முன்புறம் இரும்பிலான கூடை, சக்கரத்தில் ஆடை சிக்காமல் இருக்க தடுப்பு வசதிகள் உள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டும். மேலும், அனைத்து மிதிவண்டிகளிலும் பாதுகாப்புக்கான உத்தரவாத அடையாளம் உள்ளதை ஆராய்ந்து அதற்கான அட்டைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL