t> கல்விச்சுடர் தலைசிறந்த பெண் கல்வியாளா்கள் பெயரில் ஆராய்ச்சி இருக்கை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

7 December 2019

தலைசிறந்த பெண் கல்வியாளா்கள் பெயரில் ஆராய்ச்சி இருக்கை



 
தலைசிறந்த பெண் கல்வியாளா்கள், விஞ்ஞானிகள் பெயரில் ஆராய்ச்சி இருக்கை தொடங்குவதற்கான பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.
 இதுதொடா்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 தலைசிறந்த பெண் கல்வியாளா்கள், பெண் நிா்வாகிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலியலாளா்கள், பெண் சமூக சீா்திருத்தவாதிகள் ஆகியோா் பெயா்களில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் 10 ஆராய்ச்சி இருக்கைகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக நிதியுதவியின் கீழ் யுஜிசி அனுமதிக்க உள்ளது.
 இந்த ஆராய்ச்சி இருக்கையை தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் விரிவான திட்ட பரிந்துரைகளை அடுத்த 21 நாள்களுக்குள் யுஜிசி-க்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை வலைதளத்தில் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL