t> கல்விச்சுடர் பள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள உயர்மட்டக் குழு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

6 January 2020

பள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள உயர்மட்டக் குழு

பள்ளிக்கல்வித்துறைக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதற்காக 4 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுகள், அரசாணைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் விசாரணைக்கு வரும் போது, துறை சார்ந்த அலுவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் தர நேர்வதால் பல்வேறு திட்டப்பணிகள் முடங்கி உள்ளன.


இதனை தவிர்க்கும் வகையிலும், வழக்குகளை எதிர்கொண்டு விரைந்து முடித்து தீர்வு காணும் வகையிலும் இந்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான இந்தக் குழுவில், சட்ட அலுவலர் ஒருங்கிணைப்பாளராகவும், சட்ட ஆலோசகர் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கான அரசு வழக்கறிஞர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.  

JOIN KALVICHUDAR CHANNEL