தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது 39,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6,013 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்துகுணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 9703 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 32ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.