t> கல்விச்சுடர் குளிர்சாதன பெட்டியில் உணவு பொருட்களை வைக்கும் முறை தெரியுமா? - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

29 يونيو 2021

குளிர்சாதன பெட்டியில் உணவு பொருட்களை வைக்கும் முறை தெரியுமா?



🛒குளிர்சாதன பெட்டியில் வாடை வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி உள்ளே வைக்க வேண்டும்.

🛒பால், குழம்பு, சட்னி வகைகள் முதலியவற்றை சூடாக உள்ளே வைக்கக்கூடாது.

🛒பழச்சாற்றை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்

🛒காய்கறிகளை எப்பொழுதும் காகித்தால் சுருட்டி துணிப்பையில் போட்டு வைத்தால் கெட்டுப் போகாமல், தோல் சுருங்காமல் இருக்கும்.

🛒வெண்ணெய், பாலாடை கட்டி, பன்னீர் போன்ற உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டியில் ஃப்ரீசரில் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் அது உள்ள சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.

🛒பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து வைத்தால் கெடாமலும், நிறமும் மாறாது.

🛒தேங்காயை உடைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

🛒தர்பூசணி பழம், சாத்துக்குடி எலுமிச்சை போன்ற பழங்களை அதிக பட்சம் ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இருக்கலாம்.

🛒எக்காரணத்தைக் கொண்டும் வாழைப்பழங்கள் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது. அவற்றை எப்போதுமே நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தான் வைக்க வேண்டும்.

🛒பழங்களை ஒரு உரைப்பை அல்லது டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். அப்பொழுது பழங்கள் சுருங்காது.

🛒இரண்டு கதவு உள்ள பெட்டியில் அதாவது ஃப்ரீஸரில் உள்ளே இடம் காலியாகத்தான் இருக்குமானால், நீங்கள் சேமியா, ரவை, பிரியாணி அரிசி, பருப்பு வகைகள், கடலை மாவு பாக்கெட் இதெல்லாம் வைத்து கொள்ளலாம் அப்படியே இருக்கும்.

JOIN KALVICHUDAR CHANNEL