t> கல்விச்சுடர் பெண்களே உங்களை நீங்களே மெருகேற்ற என்ன செய்யலாம்... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 يونيو 2021

பெண்களே உங்களை நீங்களே மெருகேற்ற என்ன செய்யலாம்...



ஒருவரது முகத்தை மட்டும் வைத்து அழகை மதிப்பிட்டுவிட முடியாது. தலை முதல் கால் வரையிலான ஒவ்வொரு உறுப்பையும் எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாவும் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே அழகு அமைகிறது. அதை தான் க்ரூமிங் என்கிறோம். நடை, உடை, பாவனை என அனைத்தையும் உள்ளடக்கிய இது உங்களை தொழிலிலும் மிளிர வைக்கக்கூடியது. உங்களை நீங்களே அழகாக்கிக்கொள்ள செல்ப் க்ரூமிங் என்ற பயிற்சி உதவியாக இருக்கும் .

சுயமாக சீர்படுத்தும் இந்த பயிற்சியை மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம். எதிர்காலத்தில் அனைத்து வகையிலும் இந்த பயிற்சி உதவியாக இருக்கும். அதுகுறித்து பார்ப்போம்

*சுத்தம்*

தினமும் குளிப்பதுடன் நன்றாக அயர்ன் செய்த உடையை உடுத்தி அழகுசாதனப்பொருட்களை அணிந்தால் போதுமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சிலர் கை, கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக வைத்து கொள்வதில்லை. உடல் அவயங்கள் பற்றி பலர் கவலைப்படுவதில்லை.

அடிக்கடி மெனிக்யூர் செய்து விரல் நகங்களை சுத்தமாக வைத்து கொள்ளலாம். கண்ணை உறுத்தும் நிறங்களை நகங்களின் மீது பூசுவதற்கு பதிலாக மென்மையான நிறங்களை பயன்படுத்துவது நல்லது.

*வாசனை திரவியம்பூசுதல்..*

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சிலர் அடர் வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள். அதை தவிர்ப்பது நல்லது. ஆண்களை விட பெண்கள் பயன்படுத்தும் சில மென்மையான வாசனை திரவியங்கள்பலரையும் ஈர்க்கும்.

*மேக்கப் வேண்டாமே*

முகத்தை அழகாக காண்பிக்க அதிகமாக மேக்கப் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. மிகக்குறைவான மேக்கப்புடனோ அல்லது மேக்கப்பே இல்லாமல் இருந்தாலே போதும். நிம்மதியான உறக்கம் மற்றும் கவலையை புறந்தள்ளி மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் பயிற்சியை செய்தாலே முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும். அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டு அடுத்தவரை முகம் சுழிக்க வைக்காமல் இருப்பதும் நலமே. எளிமை பல இடங்களில் பாராட்டை பெற்றுத்தரும்.

*உடை, காலணி, நகை தேர்வில் கவனம்...*

இடத்துக்கு ஏற்ப நகை, உடைகளை தேர்வு செய்ய வேண்டும். பார்ப்போர் கண்களை உறுத்தும் விதமாக அதிக நகையும், கண்களை கூசும் ஆடைகளையும் அணிந்தால் நம் மீதான மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அதே போல் உடைக்கேற்ப காலணிகளை தேர்வு செய்வது முக்கியம்.

*உடற்பயிற்சி உதவும்.*

உடற்பயிற்சி செய்வது உடலை அழகாகவும், கட்டுகோப்புடனும் வைத்து கொள்ள உதவும். எளிமையான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி தியானம் ஆகியவற்றை தினமும் மேற்கொண்டால் மனம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும்

*சருமப்பராமரிப்பு*

சருமத்தை ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்ப சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதனால் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம். வெயில் காலத்தில் சருமத்தை பாதிக்காத கிரீம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயனம் கலந்த அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

*வீண்பேச்சு தவிர்ப்போம்*

என்ன பேசுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். நாம் சொல்வதை சுருக்கமாகவும், தெளிவாகவும் பேச வேண்டும். தேவையில்லாமல் நீட்டி முழக்கினால் மற்றவர்கள் முகம் சுளிக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை.

இவை அனைத்தையும் முறையாக பின்பற்றினால் எந்த இடத்திலும் நீங்கள் நட்சத்திரமே...

JOIN KALVICHUDAR CHANNEL