t> கல்விச்சுடர் டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப் பரவும் என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை- எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

1 يوليو 2021

டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப் பரவும் என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை- எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா


டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப்
பரவும் என்பதற்கு போதுமான தரவுகள்
இல்லை- எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்
ரன்தீப் குலேரியா

உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ்
வேகமாகப் பரவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும்
என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை என எய்ம்ஸ்
மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா
தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வேகமாக பரவும்
என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை
என்றார்.
மேலும், முகக்கவசம் அணிவது, தனிநபர்
இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா
தடுப்பு முறைகளை மக்கள் தொடர்ந்து தீவிரமாகப்
பின்பற்றினால், அடுத்தடுத்து புதிதாக உருவாகும்
உருமாற்ற வைரஸ்களிடம் இருந்தும் தற்காத்துக்
கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

JOIN KALVICHUDAR CHANNEL