t> கல்விச்சுடர் வங்கி கணக்கு வைத்திருப்பவர் கவனத்திற்கு -சைபர் கிரைம் எச்சரிக்கை. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 يوليو 2021

வங்கி கணக்கு வைத்திருப்பவர் கவனத்திற்கு -சைபர் கிரைம் எச்சரிக்கை.

வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு


வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் மொபைல் எண்ணிற்கு அவர்களது
வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த
குறுஞ்செய்தியில் அவர்களது வங்கிக் கணக்குடன் PAN CARD விபரங்கள் இணைக்க
வேண்டி இருப்பதால் இந்த லிங்கில் சென்று ஆன்லைனில் அப்டேட் செய்யவும் என்று
குறிப்பிடப்பட்டு அதில் ஒரு URL link உள்ளது. அந்த குறுஞ்செய்தியை பார்ப்பவர்கள்
அதனை வங்கியில் இருந்து அனுப்பப்பட்டது என ஏமாந்து அந்த லிங்கில் உள்நுழையும்
போது அது வங்கியின் Website போல் உருவாக்கப்பட்ட மோசடியான Phishing website ஐ
திறக்கிறது. அது பார்ப்பதற்கு வங்கியின் பெயரில் வங்கியின் வெப்சைட் போன்றே
காணப்படும். அதில் அவர்களின் வங்கி கணக்கு எண் ATM CARD NUMBER, OTP போன்ற
விவரங்கள் பூர்த்தி செய்யுமாறு கோரப்படுகிறது. அதனை வாடிக்கையாளர்கள் பூர்த்தி
செய்தவுடன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் போசடியாக எடுக்கப்படுகிறது.
எந்த வங்கியும் தனது வாடிக்கையாளருக்கு பான் கார்டு link செய்யவும் அல்லது
KYC UPDATE செய்யவும் மெசேஜ் மூலமாக லிங்க் எதுவும் அனுப்புவதில்லை. இதனை
அறியாத வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும்
மோசடி நடந்து வருகிறது. எனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் இந்த
மோசடி மெசேஜ்களை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.


சைபர் கிரைம் காவல்நிலையம்
கோவை மாநகரம்.

JOIN KALVICHUDAR CHANNEL