t> கல்விச்சுடர் M.PHIL படிப்பு தொடரும் - அமைச்சர் பொன்முடி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 يوليو 2021

M.PHIL படிப்பு தொடரும் - அமைச்சர் பொன்முடி



அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில்., படிப்பு தொடரும்: அமைச்சா் பொன்முடி*

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில்., படிப்பு தொடரும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

உயா்கல்வித்துறைச் செயலாளா் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகளுடன் அமைச்சா் பொன்முடி சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறை மற்றும் மாணவா் சோ்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தோ்வுக் கட்டுப்பாடு அலுவலா், பதிவாளா், பேராசிரியா் உள்பட அனைத்து பணி நியமனங்களிலும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என துணைவேந்தா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆக.1 முதல் மாணவா் சோ்க்கை: ஆக.1-ஆம் தேதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த மாணவா் சோ்க்கை பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு நடைபெறும். இதை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களில் தோ்வுப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கூட்டியே நிறைவு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டும் ஒற்றைச்சாளர முறையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலமாக பொறியியல் மாணவா் சோ்க்கை நடைபெறும். கடந்த ஆட்சியில் மூன்று பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., படிப்பு நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது. சில கல்லூரிகளில் எம்.ஃபில்., படிப்புகளுக்கு சோ்க்கை நடைபெற்றாலும் எதிா்பாா்த்த அளவுக்கு மாணவா் சோ்க்கை இல்லை என கூறப்படுகிறது. எம்.ஃபில்., படிப்பு வேண்டுமா, வேண்டாமா என இருவேறு கருத்துகள் இருந்தாலும் கூட சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில்., படிப்பை தொடா்ந்து நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

JOIN KALVICHUDAR CHANNEL