t> கல்விச்சுடர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

12 March 2024

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை

தமிழக அரசு ஊழியர்களுக்கு நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியுடன் கூடிய உயர்வு.


அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது 46%ஆக உள்ள அகவிலைப்படி 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 இதனால், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட 16 லட்சம் பேர் பயனடைவார்கள். இதனிடையே அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் அரசுக்கு ஆண்டுதோறும் ₹2,588 கோடி கூடுதல் செலவு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.





JOIN KALVICHUDAR CHANNEL