t> கல்விச்சுடர் தேர்தல் பயிற்சி தேதி மாற்றம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

20 March 2024

தேர்தல் பயிற்சி தேதி மாற்றம்



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது 

இந்நிலையில் தேர்தலை நடத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் முதல் பயிற்சி வகுப்பானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மார்ச் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது 

ஆனால் அன்று கிறிஸ்தவர்களின் பண்டிகை வருவதால் தேதியை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர் கோரிக்கை ஏற்று பயிற்சித் தேவையானது தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதன்படி முதல் பயிற்சி வகுப்பானது மார்ச் 23 சனிக்கிழமை என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தற்போது இயேசுபிரானின் பாடுகளை தியானிக்கும் வகையில் தவசு காலத்தை அனுசரித்து வருகிறார்கள். தவசு காலத்தின் மிக முக்கிய நிகழ்வாக புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த புனித வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்து ஞாயிறு என்று கடைபிடிக்கப்படுகிறது. 

அதே நாளில் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது தமிழகத்தில் தேர்தல் முதல் பயிற்சி வகுப்பு என அறிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL