t> கல்விச்சுடர் ஒரு தாயின் கடமை - கவிதை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

24 January 2026

ஒரு தாயின் கடமை - கவிதை


ஒரு தாயின் கடமை

அன்பு மகனே,

என் கற்பனைகளும் கனவுகளும்
மலைப்போல் உயர்ந்து நிற்கின்றன.
மருமகள் நம் வீட்டின் மகளாக
மறு பிறவி எடுக்கும் குலமகள்,
உன் உயிரில் கலக்கும் தெய்வமகள்
உன் துணைவியாக வேண்டுமென
இறைவனிடம் கையேந்துவேன்.
மெய்யழகு தோற்றத்தில் இல்லை
அது உள்ளத்தில் இருக்கிறது,
அன்பான நேசத்தில் இருக்கிறது,
பரிவான கவனிப்பில் இருக்கிறது,
மென்மையான உரையாடலில் இருக்கிறது.
உள்ளத்தின் அழகைக்காட்டும் தேவதை
உன் துணைவியாக வேண்டுமென
இறைவனிடம் கையேந்துவேன்.
ஒலிமயமான வாழ்க்கை பாதையில்
பனித்துளியாய் வருத்தங்கள் படர்ந்தாலும்,
மழைசாரலாய் மகிழ்வுகள் தூரினாலும்,
இளந்தென்றலாய் உயர்வுகள் வளர்ந்தாலும்,
கடும்புயலாய் கஷ்டங்கள் தாக்கினாலும்,
உன் நிழல் உன்னை பிரிவதில்லை.
நிழலை மிஞ்சும் உணர்வுள்ள தேவதை
உன் துணைவியாக வேண்டுமென
இறைவனிடம் கையேந்துவேன்.
என் அன்பு செல்வமே,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
அனைத்து செல்வங்களும் பெற்று
மகிழ்வுடன் ஆரோக்கியத்துடன்
நீடூழி வாழ இறைவன் என்றும்
உன்னை வாழ்த்தட்டும்
என் இனிய மகனே
இப்படிக்கு,
உன் அன்பு அம்மா


திருமதி M. புவனேஸ்வரி
கணித பட்டதாரி ஆசிரியை,
அரசு முஸ்லீம் மேனிலைப் பள்ளி,
வேலூர்.

JOIN KALVICHUDAR CHANNEL