t> கல்விச்சுடர் ஏப்ரல் 17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

19 March 2026

ஏப்ரல் 17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

 

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்கப்பட்டன. அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. வகுப்பறைகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

JOIN KALVICHUDAR CHANNEL