. -->

Now Online

FLASH NEWS


Friday 22 March 2019

2019 ல் விடை கொடுக்கும் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு நன்றி மடல்



*🎫பணம் அல்ல அழகு
நல்மனம் தான் அழகென்று கற்பித்த காஸ்பெர்க் (Baron Hausberg) பிரபுவே
சென்று வா

*🐶நாய் மூலம் மனிதநேயம் கற்பித்த ஷெல்லியே சென்று வா

🎺🎷பிறப்பில் தாலாட்டு
இறப்பில் ஒப்பாரி
தூணிலும் இசை துரும்பிலும் இசையென்று கற்பித்த இசை மேதாவி (Carl Paulnack) கார்ல் பால்நெக்கே சென்று வா

*🎧பழைய நினைவுகள் சுகமான பாடல்கள் என்று கற்பித்த (D.H Lawrance) லாரன்ஸே சென்று வா🎧

*🤬என்கடன் கடன் இல்லாமல் இருப்பதே என்று கற்பித்த ராப் (Rob Reilly's Dad) ரெய்லி அப்பனே சென்று வா🎹

*🌴அறிவோடு சேர்ந்த நற்பண்புகள்தான்  நல்லொழுக்கம் என்று கற்பித்த வரலாற்று நாயகன் கோகலேவே (Gokhale) சென்றுவா

*நாம் இன்றைக்கு நல்லவங்களா இருப்பதையும் நாளைக்கு கெட்டவங்களா  இருப்பதையும் காலமும் சூழலும் முடிவு செய்யும் என்று கற்பித்த ஹீரோவா இருந்து வில்லன் ஆன ஜூடாஸே (Judas Model) சென்று வா🧟‍♂

*🥛இன்றைய தண்ணீர் கோப்பைகள் நாளைய அமிழ்த கிண்ணங்கள் என்று கற்பித்த (Chaya) சாயாவே சென்று வா🍸

*🏃‍♀வாழ்க்கை என்ற போராட்ட வெள்ளத்தில்
பெண் வீழ்பவள் அல்ல
மூழ்கி முத்து எடுப்பவள் என்று கற்பித்த தண்ணீர் பெண் (Celine) செலினே சென்று வா🚣‍♀

*🚲சைத்தான் சைக்கிள்ல தான் வரும்னு இரண்டாம்தாளில் எங்களை அச்சுறுத்திய சைக்கிள் விஞ்ஞானி (Rex Coker's brother)  ரெக்ஸ்காக்கர் தம்பியே சென்று வா

*👨‍🎓ஊருக்கு ராஜா என்றாலும் வீட்டுக்கு நான் பிள்ளை தான் என்று கற்பித்த டெல்லி (Kumar) குமாரே சென்று வா

*🧒ஆபத்தில் உதவுவது கத்தி இல்லை புத்தி என்று சத்தமில்லாமல் மூக்குப்பொடி போட்ட பொடியன் ஹூபர்டே (Hubert) சென்று வா🤵

*நீங்கள்  2019 ல் விடைகொடுத்தாலும் நீங்கள் கற்பித்துவிட்டு சென்ற விழுமங்கள் காலம் கடந்து நிற்கும் நன்றி.

கற்பனை
மோ.பிரபாகரன்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
அ.பெ.மே.நி. பள்ளி கொரடாச்சேரி.
திருவாரூர் மாவட்டம்.*