. -->

Now Online

FLASH NEWS


Sunday 31 March 2019

புதிய அரசாணையை திரும்ப பெற்றால் இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்துவோம்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்...!!








புதிய அரசாணையை உயர்கல்வித்துறை திரும்பபெறும்பட்சத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த தயாராக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.  கடந்த ஆண்டு முதல்முறையாக இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்பட்டது.



இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்தும் கமிட்டி பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா  விலகியுள்ளார்.


 இந்நிலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


 இந்நிலையில் இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்  சூரப்பாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,


இன்ஜினியரிங் கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்த வேண்டும். இரு அமைப்புகளும் இணைந்து நடத்த முடியாது. ஏற்கனவே கவுன்சிலிங் நடத்த விரும்பவில்லை என்று  நான் கடிதம் கொடுத்துள்ளேன்.


அரசாணைப்படி இன்ஜினியரிங் கவுன்சலிங் கமிட்டியில் உயர்கல்வித்துறை செயலாளர், அதே போல் தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் உறுப்பினர்களாக இருந்தார்கள்.


புதிய அரசாணையின் படி இன்ஜினியரிங் கவுன்சலிங் கமிட்டி  தலைவராக உயர்கல்வித்துறை செயலாளரும், இணை தலைவராக தொழில்நுட்பக்கல்வி கமிஷனர் இணை தலைவராகவும் உள்ளார். தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழகத்தின்  துறைத்தலைவர் ஒருவரிடம் பி.எச்டி படித்து வருகிறார்.


 அவரை இணைத் தலைவராக கொண்ட குழுவில் எப்படி அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் பணியாற்ற முடியும். அப்படியே பணியாற்றினாலும், முதுநிலை  இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான டான்கா நுழைவுத்தேர்வு வினாத்தாளை அண்ணா பல்கலைக்கழக மத்திய தேர்வு குழுவை சேர்ந்த ஆசிரியர்கள் தான் இதுவரை உருவாக்கி வந்தார்கள்.


தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் கவுன்சலிங்கை நடத்தி, வினாத்தாள் வடிவமைத்து அதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தான் அவப்பெயர் ஏற்படும்.


அதனால் யாரேனும் ஒருவர் தான்  கவுன்சலிங்கை நடத்த வேண்டும், மற்றொரு தரப்பினர் விலகி இருக்க வேண்டும்.இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன், உயர்கல்வித்துறை செயலாளருக்கு எழுதினேன். 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2020ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.


 அதனால் அரசாணை எண். 69ஐ திரும்ப பெறும்பட்சத்தில்,  அண்ணா பல்கலைக்கழக தரப்பில் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறினார்.