. -->

Now Online

FLASH NEWS


Sunday 28 April 2019

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

1-8ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மார்ச் 2019 வரை அவகாசத்தை நீட்டித்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் சம்பளம்  நிறுத்தப்பட்டுள்ளது.




சென்னை: அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியராக பணியாற்றி வந்ததால் சம்பளத்தை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. 2009-ம் ஆண்டு அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில், 2012-ம் ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, மேலும் 4 ஆண்டுக்கள் அசிரியர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு, தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வேலைவாய்ப்பு, கல்வி; ஆரோக்கிய பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன... பிரியங்கா காந்தி பேச்சு இந்தநிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்பட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.