t> கல்விச்சுடர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 April 2019

பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு


 வயிற்று வலி ஏற்பட்டதால், அரசுப்பள்ளிக்கு குழந்தைகளை, பெற்றோர்கள் அனுப்பாததால், பரபரப்பு ஏற்பட்டது. சித்தோடு அருகே, சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நேற்று முன்தினம், முட்டையுடன் சத்துணவு சாப்பிட்ட, 47 மாணவ, மாணவியருக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவம் எதிரொலியாக, பல பெற்றோர்கள், நேற்று பள்ளிக்கு, தங்கள் குழந்தைகளை அனுப்பவில்லை.


 தகவலறிந்து கல்வித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளிக்கு சென்றனர். மருத்துவ குழுவினர், பள்ளிக்கே சென்று, குழந்தைகளை பரிசோதனை செய்தனர். இந்நிலையில் சத்துணவு ஆசிரியை, ஆயா வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


Source Dinamalar

JOIN KALVICHUDAR CHANNEL