. -->

Now Online

FLASH NEWS


Sunday 21 April 2019

ரிசர்வ் ட்யூட்டி மணி. எலெக்சன்ல ரிசர்வ் டூட்டி பார்த்தவங்க ஃபீலிங்ஸ் -ஐ இதைவிட அற்புதமாக சொல்ல முடியாது...

பத்தாவது ரிசல்ட் பார்ப்பதை விட சுவாரஸ்யமானது..எலக்சனில் நமக்கு எந்த ஊர் போட்டிருக்காங்கனு பார்ப்பது.. எல்லாரும் ஆர்டர் காபி வச்சிட்டு அங்கயும் இங்கயும் அலையும்போதும், உனக்கெங்க எனக்கெங்கனு விசாரிக்கும்போதும் ஏதோ வேற உலகத்துக்கு விசிட் அடித்த மாதிரி தோனும்.

திடீர்னு..  ஏய் உனக்கு ரிசர்வ் ட்யூட்டினு ஒரு தெய்வம் சொல்லும்போது இன்பத்தேன் வந்து இங்க் ஃபில்லரில் பாயும்.எதுக்கும் கன்பார்ம் செய்துக்க மணிப்பூர் லாட்டரியில் நெம்பர் தேடுவது மாதிரி நம்ம நெம்பரை நாமே தேடும்போது ஒவ்வொரு நெம்பரும் இருக்கும்போது வரும் சந்தோசம் இருக்கே..அடடா  அது  அத்தை மகள் அஞ்சாறு நாள் வீட்டுக்கு வந்தது மாதிரி..

அப்பிடியே பூடான் லாட்டரியில் பத்துக்கோடி விழுந்த கவுண்டமணி மாதிரி..ஐய்யோ இப்ப இந்த சந்தோசத்தை யாருக்காச்சும் சொல்லியே ஆகனும்னு அஞ்சாரு பேருக்கு போன் செய்து மகிழ்ந்தால் தான் சூப்பரா இருக்கும்.குறிப்பா நமக்கு நெருங்கிய நண்பருக்கு போன் செய்து கடுப்பேத்துவது அலாதி இன்பம்.சுகர் டெஸ்ட் எடுக்கப்போனவனுக்கு சுகர் இல்லைனு சொன்னால் வருமே அப்பிடி ஒரு சந்தோசம் இருந்துக்கிட்டே இருக்கும்.

பக்கத்தில் இருப்பவர்க்கு பம்பர் பரிசு விழுந்தாகூட ஏத்துக்குவோம்;ஆனா அவரே ரிசர்வ் ட்யூட்டி வந்திருச்சுனா அடிபுடிச்ச சாம்பாரை வேற வழியில்லாம சாப்பிட்டது மாதிரி கஷ்டமா இருக்கும்.இருந்தாலும் மனசை திடமாக்கிட்டு நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டேனு நினைச்சிட்டு நண்பர்கள் நம்மை பார்த்துட்டு பிரிஞ்சு போங்க."singgggg in the rainnnnn.. i m swainnnnn in rainnnn னு வடிவேல் மாதிரி வாழ்த்தி பாடி வழியனுப்புவோம்.
ஆனாலும் அவர் போகும்போது வயிறு எரிந்து சாபம் குடுப்பார்..உன்னை இன்னும் கொஞ்ச நேரத்தில எங்கியாவது அள்ளிட்டு போவாங்கனு..அப்ப மட்டும் லைட்டா கேரிங்கா இருக்கும்.

#பிக் பாஸ் வீடு

சரி சரி அப்பிடியே எல்லாரும் கூப்புக்கு போங்கனு ஆபிசர் சொன்னதும்.. நீ போய் கக்கூசுல போய் வெயிட் பன்னுனு கவுண்டமணி சொல்வது மாதிரி நமக்கு தெரியும். ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் நம்ம நண்பர்களை பார்த்து நலம் விசாரிச்சுட்டு துண்டை விரித்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் சோகம் கூட சுகமாகும்; வாழ்க்கை இன்ப வரமாகும்

#நேரம் மாலை 4மணி

இதய நோய் உள்ளவர்கள், பலகீனமானவர்கள் ரிசர்வ் ட்யூட்டிக்கு வருவதை தவிர்க்கவும்.

இப்பதான் மனச திடப்படுத்திக்கனும்.நாலு மணிக்கு பாகுபலி பல்வாள்தேவன் வண்டி மாதிரி ஒரு ஜீப் வரும்.பார்த்தாலே வயித்துக்குள்ள வடை சுடுற மாதிரி இருக்கும்.வந்து பேர் படிப்பாங்க.
ஏதோ என் கவுன்டர் லிஸ்ட்ல நம் பேரு வரப்போகுதோனு தோனும். பேர் வரலைனாதான் திருப்தி.

ஆனா பேர் படிச்ச பத்து பேர் கட்டுன கைலியோட ஜீப்பில் ஏறும்போது
"பார்க்க பாவமா இருக்கும்".தேவர் மகன் க்ளைமேக்ஸில் வரும் கமல் மாதிரி பாத்து சூதானமா இருங்கனு தேம்பும்போது நமக்கும் லைட்டா கண்ணு வேர்க்கும்.

#நேரம் மாலை 7மணி

இன்னும் அந்த செவுரு எத்தனை பேரை காவு வாங்க போகுதோனு மெட்ராஸ் பட வசனத்தை மனசில் நினைச்சிட்டு நிற்கும்போது மறுபடி ஜீப் வரும்.கையில் பேட் உடன் பேர் படிக்கும்போது நம்ம பேரா நம்ம பேரா னு திகிலா இருக்கும். ஒருத்தனுக்கு க்ளைமேக்ஸில பயம் காட்டுனா பரவால்ல..க்ளைமேக்ஸ் வரை பயம் காட்டுனா என்ன செய்வான். அப்பாடானு பழகுனது பத்து நிமிசமா இருந்தாலும் அவங்களை வழி அனுப்பிட்டு ஆற அமர உட்காருவோம். இனி அவ்வளவுதான் தம்பி இனி வரமாட்டாங்க னு பக்கத்திலிருக்கிறவர் சொல்லும்போதுதான் மனசுக்குள்ள மங்காத்தா தீம் மியூசிக் கேட்கும்.

இன்னும் உனக்கு ட்யூட்டி வரலையானு ஆர்வத்துடன் அப்பகூட உயிர் எடுக்கும் நண்பர்கள் கேட்கும் போது.. மொறுமொறு பிஸ்கட்டா இருந்த நாம தண்ணில நனைஞ்ச பிஸ்கட்ட சப்புனு நிற்போம்.

#நேரம் 9 மணி

ஒன்பது மணிக்கு செம்பருத்தி சீரியல் வரும்னு பார்த்தா செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரி சிவந்த கண்களோடு மறுபடி லிஸ்ட் படிக்க ஜீப்பில் ஒருத்தர் வந்தாரு.

ஆத்தா ஆடு வளத்துச்சு,கோழி வளர்த்துச்சு, ஆனா வாலன்டியரா கூப்பிட்டா வான்டடா போய் வண்டியில ஏறிடாதனு சொல்லி வளர்த்துச்சுங்கிற மாதிரி யாரும் போகாம statue விளையாட்டு விளையாடுற மாதிரி அசையாம ஆடாம நின்னோம்.

கடைசியா அஞ்சாரு பேர் போனதும்தான் சுகர் இருக்கிறவங்க ச்சூ ச்சூ போன மாதிரி நிம்மதியாய் நமக்கும்

#நேரம் 11 மணி

சிரிச்சு பேசி சந்தோசமா இருக்கும்போது ஜீப் சத்தம் மறுபடியும் கேட்கும்.விதி இன்ஸ்டால்மென்ட்ல விளையாடுதுனு நினைச்சுக்கிட்டு..

TAB ல படம் பார்த்ததை அப்பிடியே வச்சிட்டு freeze ஆகி இருப்போம். "கெழக்கால மேற்கால தெற்கால எங்க உசிரு எங்க உடம்புக்குள்ள இல்ல னு"" நெனச்சிக்கிட்டு இருப்போம்.வந்தவங்க கிட்ட ஒரு ரியாக்சனும் இல்லாம ரகசியமா பேசிக்கிட்டு இருப்பாங்க.. யப்பா ஒரு முடிவுக்கு வாங்க னு நெனச்சால் மணிக்கணக்குல பேசி நமக்கு டென்சன் பன்னுவாங்க. அப்புறம் ஒரு முடிவெடுத்து போய்டுவாங்க. அப்பதான் நிம்மதியாய் இருக்கும்.

#மறுநாள் காலை 7மணி

சிக்கனமா,சீக்கிரமா குளிச்சிட்டு வந்த உட்கார்ந்ததும் ஜீப் வரும். அட்டென்டன்ட்ஸ் எடுத்துட்டு அடிசனலா அஞ்சாறு பேரை கூப்பிட்டு போவாங்க.

"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ரிசர்வ் ட்யூட்டி வந்துபார்
பூத் கிடைச்சா எரிச்சல் பார்
கிடைக்கலைனா என் ஜாய் பார்"

உங்களையெல்லாம் பக்கத்து ஊர் யூனியன் ஆபிஸ்க்கு போங்கனு பேர் படிச்சு அனுப்பி வைச்சாங்க. மாமியார் கொடுமையைவிட மாமியாருக்கு நடக்கும் கொடுமை மாதிரி.. அந்த ஆபிசுக்கு போனோம்.அப்பவும் பக்கத்து பூத்துக்கு ஒரு ஜீப் வந்து அழைத்துப் போவாங்க. என்னவோ போடா மாதவா. இத்தன கண்டத்தில தப்பிச்சோம்னா கண்டிப்பா அதிர்ஷ்டதேவதை நம்மை உப்பு மூட்டை சுமந்திட்டு இருக்கானு புளகாங்கிதம் அடைந்து புன்னகைப்போம். சாயந்திரம் அஞ்சுமணிக்கு எல்லாரும் head quarters க்கு போங்கனு தகவல் வரும்.நாமும் மனசை கல்தோசையாக்கிட்டு போவோம்.

அங்கபோனால் அத்தனை கூட்டம் இருக்கும் கையெழுத்து போட. "வேங்கை மகன் கும்பல்ல நிக்கேனு" முட்டி மோதி வரிசையில் போகனும்.இரண்டு நாளாய் vibrate mode ல இருந்துட்டு அப்பதான் silent mode க்கு வருவோம்.

எல்லா ட்யூட்டியிலும் இருப்பது மாதிரி ரிசர்வ் ட்யூட்டியிலும் ரிஸ்க் இருக்கு.இரண்டு நாளும் நிம்மதியாய் நிமிர முடியாது.ஒவ்வொரு நொடியும் நம்மை செதுக்குவதற்கு ஆள் இருந்து கொண்டே இருப்பாங்க.
எந்த இடத்தில் தூக்கி அடிப்பாங்கனு ரெடியா இருக்கனும். ஆனாலும் ஒரு த்ரில் கடைசி வரை இருந்தது.

ராமாயணமெல்லாம் முடிந்தபிறகு சீதை கிட்ட கேட்டாங்களாம்.. நீங்க எந்த இடத்தில சந்தோசமாய் இருந்ததாக இப்ப உணர்றீங்க. அதுக்கு உடனே அசோகவனம்னு சொன்னாங்களாம்.
காரணம் துன்பமாய் இருந்தபோது தான் அடுத்த நொடியின் கண்ணாமூச்சி ஆட்டத்தையும், எதிர்காலத்தின் மீதான தீராத நம்பிக்கையும் வந்திச்சுனு சொன்னாங்களாம்.

ரிசர்வ் ட்யூட்டியும் ஒருவிதத்தில் அப்படித்தான் இருந்தது.

ஜெய் ரிசர்வ் ட்யூட்டி

-மணிகண்ட பிரபு