t> கல்விச்சுடர் மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 April 2019

மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்







திருவள்ளூர்மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரம்
பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில்  இடைநிலை ஆசிரியாராக பணி புரிந்து வருகிறார்

மாற்றுத்திறனாளியான இவருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்காக சென்னை சென்றவர்
பயிற்சி வகுப்பைமுடித்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்
திரும்புகையில்
திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் புச்சிரெட்டிப்பள்ளிக்கு சற்று முன்னதாக பெருகுமிக்கும் புச்சிரெட்டிப்பள்ளிக்கும் இடையில் உள்ள திருப்பத்தில் திருத்தணியை நோக்கி மிக  வேகமாக வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதிமிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது

அதில் இடைநிலை ஆசிரியர் தாமோதரத்திற்கு தலையில் மிகப்பெரிய பலமான அடி தலையில் பட்டதால் மண்டை உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
அங்கு முடியாததால் திருவள்ளூருக்கு அனுப்பப்பட்டுள்ளார்

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்

ஒவ்வொரு தேர்தல் வகுப்பிற்கும் நிறைய ஆசிரியர்களுக்கு மரணம் ஏற்படுவது தொடர்கதையாகிறது

கண்டுக்கொள்ளுமா தேர்தல் ஆணையம்

தேர்தல் பணியாற்றுவோரை தேர்தல் ஆணையமே பேருந்து ஏற்பாடு செய்து அழைத்துச்சென்று மீண்டும் வீடுகளில் விட ஏற்பாடு செய்யவேண்டும்

அவர் ஆன்மா சாந்தியடைய அவரவர் வணங்கும் கடவுள்களை வேண்டிக்கொள்வோம்

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியிலும்
சொரக்காயப்பேட்டை கிராமத்தினர் மத்தியிலும் பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது

தேர்தல் ஆணையம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கியது ஏன்

இவர் *2009 க்குப்பிறகு பணியில் சேர்ந்தவர்

ஊதியக்குழுவால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் ஒருவர்

டெட் தேர்வெழுதி பணிக்கு வந்தவர்

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்

இவருக்கு சமீபத்தில்தான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது

குழந்தையில்லை

இவர் உடன் பிறந்தவர் நான்கு சகோதரிகள்


JOIN KALVICHUDAR CHANNEL