t> கல்விச்சுடர் பிளஸ்-2 மாணவர்களுக்கு. ஒருவருட பயிற்சியுடன் வேலை! ஹெச்.சி.எல்., நிறுவனத்தில்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 May 2019

பிளஸ்-2 மாணவர்களுக்கு. ஒருவருட பயிற்சியுடன் வேலை! ஹெச்.சி.எல்., நிறுவனத்தில்!


பிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: ஒரு வருட பயிற்சியுடன் வேலை அளிக்கிறது எச்.சி.எல் நிறுவனம் : பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு!





பிளஸ்டூ தேர்வான மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாக ஒராண்டு உதவித்தொகையுடன் கம்யூட்டர் இன்ஜினியர் பயிற்சியும், பின்னர் 3 ஆண்டு சம்பளத்துடன் வேலையும் அளிக்க முன்வந்துள்ளது எச்.சி.எல் நிறுவனம். மூன்றாண்டு பணி முடியும்போது பட்டப்படிப்பு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது





அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு:





பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும்





பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது





அரசுப் பள்ளிகளில் பயின்று 60 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தினை பயின்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது





ஆகவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்





இதுகுறித்து மாணவர்கள் அறிந்துக்கொள்ள 84380 02947 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.




JOIN KALVICHUDAR CHANNEL