. -->

Now Online

FLASH NEWS


Thursday 30 May 2019

ஆசிரியர் தகுதி தேர்வை எழுதும் 3,756 பேர்: மொபைல் போன் எடுத்து வந்தால் சிக்கல்

நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை, 3,756 பேர் எழுதுகின்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) சார்பில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வு, ஜூன், 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது.தேர்வு மையம் விபரம்:குன்னுார் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னுார் புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளி, அருவங்காடு புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊட்டி ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி, கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, கூடலுார் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலுார் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய, 9 தேர்வு மையங்களில் நடக்கிறது.

இந்த தேர்வை நீலகிரி மாவட்டத்தில், 3,756 பேர் எழுதுகின்றனர்.தேர்வு மையங்களில் போதிய குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களை சென்றடைய போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டத்துடன் கூடிய தேர்வறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சொல்லி எழுதுபவர் சலுகை தேர்வு துறையால் வழங்கப்பட்டுள்ளது.கடைப்பிடிக்க வேண்டியவை: தேர்வர்கள் தேர்வறைக்குள் தேர்வு நுழைவு சீட்டு மற்றும் இரண்டு கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனா மட்டும் கொண்டு வர வேண்டும்.

கைக்குட்டை எடுத்து வரக்கூடாது. தேர்வறையில் அனுமதிக்கப்படாத துண்டுதாள், போன் போன்றவை வைத்திருக்க கூடாது. வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடகூடாது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.