t> கல்விச்சுடர் 500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சம்மன்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 May 2019

500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சம்மன்!


மாணவர்களின் தேர்வு வினாத்தாள்களை சரியாக திருத்தாதது ஏன் என்று 500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.



கடந்த மார்ச் மதம் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19 அன்று வெளியாகின.இதில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர்.இந்நிலையில்,மறுகூட்டலுக்குக்கான முடிவுகள் நேற்று வெளியானது.இதில் தேர்ச்சி பெறாமல் இருந்த சுமார் 1500 மாணவர்கள் வரை அதிக மதிப்பெண் பெற்று இருந்துள்ளனர்.





மேலும் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆசிரியர்கள் தேர்வு மதிப்பீடு செய்யும் போது தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டது.72 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கவனக்குறைவால் 27 மதிப்பெண் மட்டுமே வழங்கியுள்ளனர்.








அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.





மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 பேர் ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.





விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குனர்கள் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.500 ஆசிரியர்களுக்கும் மேலாக தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL